ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா மீது திருமண நிகழ்வில் நடந்த கொலை முயற்சி தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டின்போது குண்டு குறிதவறிச் சென்றதால் ஃபரூக் அப்துல்லா நூலிழையில் உயிர்தப்பினார். அவரை துப்பாக்கியால் சுட்டவரை போலீசார் கைது செய்தனர்.
