×

கேரள அமைச்சருக்கு விழாவிற்கு அழைப்பு இல்லை பிரதமர் நிகழ்ச்சியை புறக்கணித்தார் முதல்வர் பினராய் விஜயன்

திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் கொச்சியில் தேசிய நெடுஞ்சாலை திறப்பு விழாவில் கேரள பொதுப்பணித்துறை அமைச்சருக்கு அழைப்பு விடுக்காததை கண்டித்து பிரதமர் பங்கேற்ற விழாவை முதல்வர் பினராயி விஜயன், அமைச்சர்கள் புறக்கணித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கேரளா மாநிலம் கொச்சியில் நேற்று தேசிய நெடுஞ்சாலை திறப்பு, புதிய ரயில்கள் தொடக்க விழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் பிரதமர் மோடி பங்கேற்று ரூ. 10,500 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் பங்கேற்க கேரள முதல்வர் பினராயி விஜயன், அமைச்சர்கள் ராஜேஷ், கிருஷ்ணன் குட்டி ஆகியோருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பொதுப்பணித்துறை அமைச்சர் முகம்மது ரியாசுக்கு அழைப்பு விடுக்கப்படாதது கேரளாவில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து அமைச்சர் முகம்மது ரியாஸ் கூறியது: மும்பை கன்னியாகுமரி என்.எச்.66 பணிகளுக்காக கேரள அரசு ரூ. 5,500 கோடி ஒதுக்கியது. கேரளாவில் கடந்த காங்கிரஸ் அரசு தேசிய நெடுஞ்சாலை திட்டத்தை முடக்கி வைத்தது. ஆனால் இடதுசாரி கூட்டணி அரசு வந்த பின்னர் தான் கடந்த 10 ஆண்டுகளாக இந்தத் திட்டத்திற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டன.

ஆனால் தேசிய நெடுஞ்சாலை திறப்பு விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சரான எனக்கு அழைப்பு விடுக்காதது ஏற்கத்தக்கதல்ல. பாஜ மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாஜ தலைவரை விட பொதுப்பணித்துறை அமைச்சர் எந்த விதத்தில் குறைந்தவர் என்று தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார். இந்தநிலையில் பொதுப்பணித்துறை அமைச்சருக்கு அழைப்பு விடுக்காததை கண்டித்து பிரதமர் பங்கேற்கும் விழாவை முதல்வர் பினராயி விஜயன், அமைச்சர்கள் ராஜேஷ், கிருஷ்ணன் குட்டி ஆகியோர் புறக்கணித்தனர். இந்த விவகாரம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* போட்டி திறப்பு விழா
இதற்கிடையே பிரதமர் மோடி பங்கேற்கும் விழாவுக்கு போட்டியாக தேசிய நெடுஞ்சாலை திறப்பு விழாவை கேரள அரசு தனியாக நடத்த தீர்மானித்தது. இதன்படி காசர்கோடு நுள்ளிப்பாடி பகுதியில் தலப்பாடி – செங்களா பாதையை காசர்கோடு எம்எல்ஏ குஞ்ஞம்பு திறந்து வைத்தார். தொடர்ந்து அந்த சாலையில் பொதுப்பணித்துறை அசை்சர் முகமது ரியாஸ் ரோட் ஷோ நடத்தினார்.

Tags : Kerala ,Minister ,Chief Minister ,Pinarayi Vijayan ,Thiruvananthapuram ,Kochi, Kerala ,Public Works ,National Highway ,Kochi ,
× RELATED மக்களவையில் சபாநாயகருக்கு எதிரான...