- சபரிமலை
- மேல்சாந்தி
- திருவனந்தபுரம்
- சபரிமலை ஐயப்பன் கோவில்
- மண்டலா
- மகரவிளக்கன்றும்
- கேரள உயர் நீதிமன்றம்…
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கத் தகடுகளை திருடிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், கடந்த மண்டல, மகரவிளக்கு சீசனில் சபரிமலையில் உள்ள வங்கியில் ரூ. 19 கோடிக்கு அதிகமாக கேரள உயர் நீதிமன்றத்தில் சபரி சிறப்பு ஆணையர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். மாளிகைப்புரம் கோயில் மேல்சாந்தி மட்டும் தன்னுடைய வங்கிக் கணக்கில் ரூ. 46.51 லட்சத்தை டெபாசிட் செய்துள்ளார்.தேவசம் போர்டு கொடுக்கும் சம்பளம் மற்றும் பக்தர்களிடமிருந்து கிடைக்கும் தட்சணை ஆகியவற்றை வைத்து கணக்கிடும் போது டெபாசிட் பணம் மிகவும் அதிகம் என்றும், உயரதிகாரிகள் முதல் சாதாரண தினக்கூலிகள் வரை லட்சக்கணக்கில் வங்கிகளில் முதலீடு செய்துள்ளனர் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
