×

நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல்? தலைமை தேர்தல் ஆணையரை நீக்கக் கோரும் நோட்டீஸ் தயார்

புதுடெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பாஜவுக்கு உதவி செய்வதாகவும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கூட பாஜவுக்கு உதவுவதை நோக்கமாக கொண்டது என பல்வேறு எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கக் கோரும் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதற்கான நோட்டீசில் மக்களவை எம்பிக்கள் 120 பேரும் மாநிலங்களவை எம்பிக்கள் 60 பேரும் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த நோட்டீஸ் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

Tags : Chief Election Commissioner ,New Delhi ,Gyanesh Kumar ,BJP ,Chief Election Commissioner… ,
× RELATED மக்களவையில் சபாநாயகருக்கு எதிரான...