ஈரான் மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்: தெஹ்ரான் எண்ணெய் கிடங்குகள் தீப்பற்றி எரிந்தன!

தெஹ்ரான்: மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரான் மீது நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், தலைநகர் தெஹ்ரானில் உள்ள முக்கிய எண்ணெய் கிடங்குகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் தாக்கப்பட்டன.

வரலாற்றிலேயே முதல்முறையாக இஸ்ரேல், ஈரானின் எரிபொருள் கட்டமைப்புகளைத் தாக்கியுள்ளது. இந்தத் தாக்குதலால் தெஹ்ரான் நகர் முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளதோடு, பிரம்மாண்டமான தீ வானை நோக்கி எழும்பும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இங்கிருந்துதான் சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுவதால், இந்தத் தாக்குதல் உலகளாவிய பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

இந்த மோதலில் உயிரிழந்த அமெரிக்க வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தாவிட்டால், தாக்குதலின் தீவிரம் பல மடங்கு அதிகரிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

மறுபுறம், ஈரானின் மூத்த அதிகாரி அலி லாரிஜானி அமெரிக்காவைக் கடுமையாகச் சாடியுள்ளார். “இந்த போருக்காக அமெரிக்கா மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும். அமெரிக்கா தனது இலக்குகளை அடைவதில் முற்றிலும் தோல்வியடையும்,” என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: