உங்கள் வேலையை மட்டும் கவனிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்: ட்ரம்பிற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடிதம்

சென்னை: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் காட்டமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவர் எழுதியுள்ள கடிதத்தில்; “மதிப்பிற்குரிய அதிபர் அவர்களே, இந்தியர்களாகிய நாங்கள் சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட ஒரு நாட்டின் குடிமக்கள். நாங்கள் இனி எந்தவொரு வெளிநாட்டின் உத்தரவுகளையும் பின்பற்றுவதில்லை.

எனவே, உங்கள் முழுத் திறமையுடன் உங்கள் வேலையை மட்டும் கவனிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இறையாண்மை கொண்ட நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர மரியாதையே நிலையான அமைதிக்கு அடித்தளம். உங்கள் நாட்டிற்கும் மக்களுக்கும் அமைதியும் வளமும் கிடைக்க நாங்கள் வாழ்த்துகிறோம்.” என தெரிவித்துள்ளார்.

Related Stories: