ஓசூர் : ஓசூர் தேர்ப்பேட்டை மலை மீது உள்ள சந்திரசூடேஸ்வரர் கோயில் தேர்த்திருவிழா நடந்தது. அதனை தொடர்ந்து தெப்ப உற்சவம் நடந்தது. இந்த விழாவில், தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். தேர்த்திருவிழா நாளன்று, நகரின் அனைத்து பகுதிகளிலும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதனால், தேர்த்திருவிழாவின் போது, நாள் ஒன்றுக்கு 72 டன்னுக்கு அதிகமான குப்பை சேகரிக்கப்பட்டது. இந்த பணியில் 200க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டனர். தேர்த்திருவிழாவுக்கு லட்சக்கணக்கானோர் வந்ததையடுத்து, தொற்று நோய் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நகர் பகுதி முழுவதும் கொசு மருந்து தெளிக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
