ஆந்திராவில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில் 2 குழந்தைகளை பெற்ற தாய்க்கு ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகை: முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

திருமலை: பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில் ஆந்திராவில் 2 குழந்தைகளை பெற்ற தாய்க்கு ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில் முதல்வர் சந்திரபாபு நாயுடு ‘போஷன் சிசு சுரக்ஷா’ என்ற புது திட்டத்தை அறிவித்துள்ளார். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட தாய்மார்களுக்கு பிரசவத்தின்போது உடனடி ஊக்கத்தொகை ரூ.25,000 வழங்கப்படும்.

இதனுடன் ஐந்து ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1,000 நிதி உதவி, 18 வயது வரை இலவச கல்வி, ரூ.50,000 மருத்துவ காப்பீடு ஆகியவை வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் ஊழியர்களுக்கு 12 மாத மகப்பேறு விடுப்பு, தந்தையர்களுக்கு 2 மாத தந்தைவழி விடுப்பு மற்றும் வருடத்திற்கு 15 நாட்கள் நல்வாழ்வு விடுப்பு போன்ற முக்கிய சலுகைகள் அரசு மூலம் வழங்கப்பட உள்ளது. உலகின் பல நாடுகள் முதியோர் நிறைந்த நாடுகளாக மாறி வரும் நிலையில் இந்தியாவில் மக்கள் தொகை தற்போது பெரிய சொத்தாக உள்ளது.

ஆனால் தற்போது உள்ள இளம் சமூகத்தில் ஒரு குழந்தையுடன் நிறுத்தி விடுவதால் இந்த முறை தொடர்ந்தால் அடுத்த 20 , 30 ஆண்டுகளில் பிறப்பு விகிதம் குறைந்து இந்தியாவும் முதியவர்களுக்கான நாட்டில் இடம்பெறும் நிலை ஏற்படும் என்பதால் மக்கள் தொகை மாநிலத்தின் நாட்டின் சொத்து என்பதால் மக்கள் தொகை விகிதத்தை அதிகரிக்க இந்த செயல் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது என முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

Related Stories: