இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைத் தவிர்க்க, LPG உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவு

டெல்லி: மத்திய கிழக்கு போர்ச் சூழலால், இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைத் தவிர்க்க, LPG உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. LPG உற்பத்திக்குத் தேவையான Propane, Butane வாயுக்களை Petrochemical நிறுவனங்களுக்கு கொடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. உற்பத்தியாகும் அனைத்து எரிவாயுவையும் Indian Oil, HPCL, BPCL நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் LPG தேவையில், சுமார் 90% மத்திய கிழக்கு நாடுகளே பூர்த்தி செய்துவந்த நிலையில், அது தற்போது தடைபட்டுள்ளதால் ஒன்றிய அரசு அவசரக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: