×

பாஜ புகழை பாடுவதால் சி.வி.சண்முகத்துக்கு எடப்பாடி‘செக்’: போட்டி வேட்பாளராக களமிறங்கும் மாஜி எம்.பி

விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் பவர்புல்லாக இருந்து வரும் மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் எம்பி, வட மாவட்ட அதிமுகவிற்கு, நான்தான் தளபதி என்ற பட்டத்தை சூட்டிக்கொண்டு வலம் வருவதாக அக்கட்சியில் விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக அவர் சார்ந்த விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் தன்னை அரசியல் ரேசில் யாரையும் முந்தவிடாமல், அப்படி முந்திசெல்பவர்களை கட்சியை விட்டு வெளியேற்றும் பணியை சிறப்பாக செய்தாராம்.

அதன்படி அதிமுகவில் சண்முகத்திற்கு எதிராக, ஜெயலலிதாவால் கைகாட்டி களமிறக்கப்பட்ட லட்சுமணனை அக்கட்சியிலிருந்து வெளியேற்றினார். தற்போது திமுகவில் இணைந்த அவரிடமே விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு சி.வி சண்முகம் படுதோல்வியடைந்தார். இவரைதொடர்ந்து அதிமுகவில் முன்னாள் ஒன்றிய இணை அமைச்சராக இருந்த செஞ்சி ராமச்சந்திரன், முன்னாள் எம்பி சேவல் ஏழுமலை, மத்தியகூட்டுறவு வங்கி முரளிரகுராமன் உள்ளிட்ட பலபேரை வீழ்த்தி ஆதிக்கம் செலுத்திவருவதாக கூறப்படுகிறது.

இவரால் அதிமுகவில் வீழ்த்தப்பட்ட செஞ்சி சேவல் எழுமலை ஏற்கனவே செஞ்சி தொகுதியில் எம்எல்ஏ மற்றும் ஆரணி தொகுதி எம்பியாக இருந்தவர். வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் அதிமுகவில் சி.வி சண்முகத்தைவிட மேலோங்கி எழுந்துவர, ஒருகட்டத்தில் தேர்தல் நேரம் பார்த்து மாற்றுகட்சிக்கு வேலைசெய்ததாக பழிசுமத்தி அவரை கட்சியை விட்டு நீக்கசெய்யும் பணியையும் மாஜி அமைச்சர் தரப்பு சிறப்பாக செய்ததாம். மாஜி அமைச்சரின் சூழ்ச்சியால் ஓபிஎஸ் அணிக்கு சென்ற அவரும், மாஜி அமைச்சர் தரப்பும் சட்டையை பிடிக்காத குறையாக குஸ்தியிட்டு அரசியல் செய்துவந்தனர்.

அப்படிப்பட்ட மாஜி எம்பி மீண்டும் அதிமுகவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து இணைந்துள்ளார். அப்போது, விழுப்புரம் மாவட்ட அரசியல் நிலவரம் குறித்தும் பேசியதாக கூறப்படுகிறது. அதில் விழுப்புரம் மாவட்டத்தில் சி.வி சண்முகத்தின் நடவடிக்கை இபிஎஸ்சுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறதாம். இதனால்தான் பாஜவிற்கு செல்லும் முடிவில்இருந்த சேவல் ஏழுமலையை அதிமுகவில் மீண்டும் இணைத்து ேதர்தல் பணியாற்ற உத்தரவிட்டிருக்கிறாராம் இபிஎஸ்.

இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் கூறுகையில், ‘சி.வி.சண்முகம் எம்பியின் அரசியல் செயல்பாடுகள் சிலமாதங்களாகவே இபிஎஸ்சுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் எதிராகவே உள்ளது. எம்பியாக உள்ள சி.வி சண்முகம் அதிமுக தலைமைக்கு தெரியாமலேயே டெல்லி மேடலிடத்தில் ெநருக்கத்தை ஏற்படுத்தி ஏற்கனவே ஒன்றிய அமைச்சர் பதவிக்கு காய் நகர்த்தினார். இதனைஅறிந்த இபிஎஸ், பாஜ தலைவர்கள் மூலம் தடை போட்டார். தொடர்ந்து, தற்போது அதிமுக நிகழ்ச்சிகளில் சி.வி.சண்முகம் பாஜ புகழ் பாடிக்கொண்டிருக்கிறார்.

எம்ஜிஆர், ஜெயலலிதா, இபிஎஸ் திட்டங்களைக்கூட சொல்லாமல் எல்லாமே ஜி, மோடிஜி, அவர் இருந்தால் தமிழகத்திற்கு எல்லாமே கிடைக்கும் என்று வார்த்தைக்கு வார்த்தை பாஜ புகழ்தான் பாடிக்கொண்டிருக்கிறார். அவருடைய பேச்சு, அரசியல் நடவடிக்கைகள் எல்லாம் எதிராகவே இருப்பதால், மாவட்டத்தில் சண்முகத்திற்கு எதிராக செக் வைக்கவே எம்எல்ஏ, எம்பியாக இருந்த சேவல் ஏழுமலையை இபிஎஸ் தேர்தல் நேரத்தில் களமிறக்கியுள்ளார்.

இதனை மாவட்ட செயலாளர் என்ற முறையில் சி.விசண்முகத்திற்குகூட தெரிவிக்கவில்லை. தேர்தலுக்குப்பிறகு மாவட்டத்தை 2 ஆக பிரித்து சேவல் ஏழுமலைக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்படலாம் என்றும், கட்சியை வலுப்படுத்தவும், சி.வி.சண்முகத்தின் ஓவர்டெக் அரசியலுக்கு செக் வைக்கவும் இந்த அதிரடி முடிவில் இபிஎஸ் இறங்கியுள்ளார்’ என்றனர்.

Tags : C.V. Shanmugam ,BJP ,Former Minister ,Villupuram district AIADMK ,commander ,northern district AIADMK ,
× RELATED கூட்டணி வண்டி எப்போ வரும்? ராமதாசுக்கு நெருக்கடி கொடுக்கும் ஆதரவாளர்கள்