- திருப்பூர்
- அவினாசி
- திருப்பூர் மாவட்டம்
- அசிமுகா எம். எல் ஏ.
- Tanapal
- லோகேஷ் தமிசெல்வன்
- ஏ. வியாழன். எம். கே. I. டி.
- எம்.ஜி.ஆர்
- மாநில துணை செயலாளர்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி (தனி) தொகுதியில் அதிமுக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் முன்னாள் சபாநாயகர் தனபால். இவரது மகன் லோகேஷ் தமிழ்செல்வன், அ.தி.மு.க. ஐ.டி.பிரிவில் இருந்தார். மேலும், அவிநாசி தொகுதி பொறுப்பாளராகவும், எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில இணை செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். இத்தொகுதியில் வெற்றிபெற்ற தனபால், உடல்நிலை சரியில்லை எனக்கூறி தொகுதி பக்கமே எட்டி பார்க்கவில்லை. இதை காரணம் காட்டி, லோகேஷ் தமிழ்செல்வன், தொகுதியில் ஆங்காங்கே தலையை காண்பித்து வந்தார்.
‘‘இம்முறை தந்தைக்கு பதில் நான்தான் இத்தொகுதியில் களம் இறங்குவேன்…’’ என பேசி வந்தார். ஆனால், இவருக்கு கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு வலுத்தது. இவருக்கு சீட் கொடுக்கக்கூடாது என கட்சி நிர்வாகிகள் பலர், தலைமைக்கு அடுத்தடுத்து புகார் மனு அனுப்பினர். இதனால் கடுப்பான லோகேஷ், கடந்த மாதம் த.வெ.க.வில் இணைந்து விட்டார். அங்கு சீட் கேட்டு வருகிறார். இந்த சூழலை, தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டு, இத்தொகுதியில் கால் பதிக்க முயன்று வருகிறார் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன்.
இவர், ஏற்கனவே நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு, திமுக வேட்பாளர் ஆ.ராசாவிடம் தோல்வி அடைந்தார். தற்போது ஒன்றிய அமைச்சராக இருந்தாலும், அதை ராஜினாமா செய்துவிட்டு, இம்முறை தமிழக சட்டமன்றத்துக்குள் நுழைந்துவிட வேண்டும் என ஆசைப்படுகிறாராம். அதற்காக தமிழகம் வரும்போதெல்லாம் அவிநாசி தொகுதியில் தலைகாட்டிவிட்டுப் போகிறாராம்.
