- திமுகா கூட்டணி
- செந்தில் பாலாஜி திட்டம்
- கரூர்
- திமுகா
- கொடங்கிபதி
- கரூர் சட்டமன்றத் தொகுதி
- சட்டமன்ற உறுப்பினர்
- செந்தில் பாலாஜி
கரூர்: கரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோடங்கிப்பட்டியில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: 2021 சட்டமன்ற தேர்தலின்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு விட்டது. அதனால் 2021ம் ஆண்டு தேர்தலை விட 2026 தேர்தலில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும்.
தோழமை கட்சிகளுக்கு மரியாதை கொடுத்து அரவணைத்து செல்பவர் தமிழக முதல்வர். இது தேர்தலோடு முடியும் விஷயம் இல்லை. அவர்களோடு தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்ற மகத்துவத்தை உணர்ந்து தமிழக முதல்வர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். வரும் சட்டமன்ற தேர்தலில் கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். தமிழகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றார்.
