பாமகவில் தந்தை, மகனிடையே மோதலால் கட்சி இரண்டாக உடைந்துள்ளது. இதனால் பாமக வலுவிழந்து வருகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் பாமக அன்புமணி அதிமுகவுடன் கூட்டணியை உறுதிப்படுத்தி உள்ளது. கூட்டணி அமைத்தாலும், பாமகவுக்கு முழுமையான பலம் கிடைக்காது என அதிருப்தி அடைந்துள்ள நிர்வாகிகள் மற்ற கட்சிகளுக்கு மாறி வருகின்றனர்.
இதில் கூட்டணி கட்சிக்குள்ளேயே மாறுதல் என்பது பாமகவில் உயர்மட்ட நிர்வாகிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பேரூராட்சி பாமக அன்புமணி பிரிவு நகர இளைஞரணி அமைப்பாளர் ஜெயமணி தலைமையில், பாமகவை சேர்ந்த 25 இளைஞர்கள் அதிமுகவில் இணைந்தனர்.
அவர்கள் எடப்பாடி தலைமையில் சிறப்பாக பணியாற்றுவோம் என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மேலும் சில நிர்வாகிகள் பிற கட்சிகளுக்கு மாற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்படியே போனால், பாமகவில் நிர்வாகிகள் விரல்விட்டு எண்ணும் அளவுக்கு கூட இருக்கமாட்டார்கள் என கட்சியினரே பரபரப்பாக பேசி வருகின்றனர்.
