மாத உதவித்தொகை உயர்த்தி கேட்டு மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

புதுக்கோட்டை, பிப். 10: மாத உதவித்தொகை ரூ.3,000 வழங்கக்கோரி புதுக்கோட்டையில் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. மாவட்ட பொருளாளர் கிரிஜா தலைமை வகித்தார். போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரமாக உயர்த்தி உதவித்தொகை வழங்க வேண்டும், தனியார் துறை பணிகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தபட்ச 5 சதவீத வேலைவாய்ப்பு இடங்களின் உத்தரவாதம் என்று தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். அரசு துறைகளில் பின்னடைவு உள்ள காலி பணியிடங்களை கண்டறிந்து 3 மாதங்களில் நிரப்ப 2013ம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி வெளிப்படையாக அறிவித்து உடன் நிரப்ப வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. நிர்வாகிகள் கணேஷ், ராமகிருஷ்ணன், சண்முகராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: