- சீதம்பு-பத்கம்
- ஊரக
- மகிழ்ச்சி
- கலசப்பாக்கம்
- கலாசபக்கம் யூனியன்
- சீதம்பு-பதம்
- கலசபாக்கம்
- சைதாம்பட்டு சங்கம்
*15 கிராம மக்கள் மகிழ்ச்சி
கலசப்பாக்கம் : கலசப்பாக்கம் ஒன்றியம் சீட்டம்பட்டு-பாடகம் செல்லும் சாலை ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கலசப்பாக்கம் அடுத்த சீட்டம்பட்டு-பாடகம் செல்லும் சாலை வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்ததால் சாலை வசதி செய்வதில் சுணக்கம் ஏற்பட்டு வந்தது.
இதனால் சுமார் 75 ஆண்டுகளுக்கு மேலாக சாலை வசதி கிடைக்காமல் கிராம மக்கள் பெரும் அவதியடைந்து வந்தனர். இதுதொடர்பாக பலமுறை அவர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இதனையடுத்து சீட்டம்பட்டு,பாடகம்,கோவூர்,லாடவரம்,கமலபுத்தூர்,அண்ணாநகர், சின்ன கல்லந்தல் பெரிய கல்லந்தல் உள்ளிட்ட 15 கிராமங்களை சேர்ந்த மக்கள் சுமார் 14 கிலோமீட்டர் தூரம் சுற்றி திருவண்ணாமலை செல்லவேண்டிய நிலை இருந்து வந்தது.
இதுதொடர்பாக வனத்துறை அனுமதி பெற்று சாலை வசதி செய்து தர முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மஞ்சுளா சுதாகர், முன்னாள் ஊராட்சி தலைவர் ஜெயபிரகாஷ் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் எம்எல்ஏ பெ.சு.தி. சரவணனிடம் கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து அமைச்சர் எ.வ.வேலுவிடம் வலியுறுத்தியதன்பேரில் சாலைவசதி மேற்கொள்ள வனத்துறை அனுமதி வழங்கியது. சாலை வசதி செய்து தர ரூ. 18 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகளை கலெக்டர் தர்ப்பகராஜ், எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் ஆகியோர் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி வைத்தனர். இதையடுத்து பணிகள் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. சுமார் 75 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறியுள்ளதால் 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
