ஓசூரில் திருவையாறு கர்நாடக இசை விழா

ஒசூர், பிப்.9: ஓசூரில் காமராஜ் காலனியில் “ ஓசூரில் திருவையாறு 2021” இசை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னாள் எம்எல்ஏ மனோகரன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். குறிஞ்சி பைன் ஆர்ட்ஸ் மற்றும் டேலண்ட் ட்ரைப் கன்சல்டிங் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து, இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.

டிஜிட்டல் முறையில் நிகழ்ச்சிகளை நடத்தி, குரல் தேர்வு செய்யப்பட்டவர்கள் இறுதிப் போட்டியில் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தி பரிசளித்தல், 101 இசைக் கலைஞர்களை கொண்டு பஞ்சரத்தின கீர்த்தனை வைபவம் நடத்துதல், தியாகராஜா ஆராதனைகளில் முதன்முறையாக இரட்டை வயலின் கொண்டு நெய்வேலி ராதாகிருஷ்ணன் நிகழ்த்தும் இசை கச்சேரி, நாதமும் வேதமும்” என்ற தலைப்பில் பிரம்மஸ்ரீ சர்மா சாஸ்திரிகள் நிகழ்த்தும் சொற்பொழிவுகள், கர்நாடக இசைக் கலைஞர்களான சந்தீப் நாராயணன் மற்றும் மாளவிகா சுந்தர் ஆகியோரது இசைக்கச்சேரி இடம்பெற்றன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குறிஞ்சி பைன் ஆர்ட்ஸ் முன்னாள் எம்எல்ஏ மனோகரன், டேலண்ட் ட்ரைப் கன்சல்டிங் நரசிம்மன் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: