சென்னை: சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் கார்த்திக் (23), பெருங்குடி பகுதியை சேர்ந்த பாலாஜி (23). நண்பர்களான 2 பேரும், துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிபிஏ இறுதியாண்டு படித்து வந்தனர். இவர்கள், நேற்று காலை பைக்கில் கல்பாக்கம் அடுத்த முகையூரில் உள்ள கோயிலுக்கு சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் இசிஆர் சாலையில் வந்தபோது, சாலையில் குறுக்கே ஓடிய நாய் மீது பைக் மோதியதில், 2 பேரும் நிலைத்தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது, புதுச்சேரியிலில் இருந்து சென்னை நோக்கி அதிவேகமாக வந்த ஒரு கார், கீழே விழுந்து கிடந்த கல்லூரி 2 மாணவர்கள் மீது மோதியது. இதில், நண்பர்கள் 2 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் மாணவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
