சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய வீட்டுமனைத் திட்ட நிறுவனமான ஜி ஸ்கொயர் குழுமம் ஆனது, சென்னையில் மிக வேகமாக வளர்ந்து வரும் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் கொண்ட மேடவாக்கத்தில், தனது பிரீமியம் குடியிருப்பு மனைத் திட்டமான ‘ஜி ஸ்கொயர் சவுத் கிரவுன்’ இரண்டாம் கட்டத்தை அறிவித்துள்ளது. 3.36 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த வீட்டுமனைத் திட்டத்தில், நன்கு திட்டமிடப்பட்ட குடியிருப்பு மனைகளுடன், ஒரு சதுர அடிக்கு ரூ.6,999 என்ற சலுகை விலையில் (முதல் 25 முன்பதிவுகளுக்கு மட்டுமே) வழங்கப்படுகின்றன.
வேளச்சேரி – தாம்பரம் சாலையில் இருந்து வெறும் 1 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மேடவாக்கம் பகுதியானது, சென்னையின் அதிவேக வளர்ச்சியைக் கொண்ட ஒரு குடியிருப்பு மையமாகத் திகழ்ந்து வருகிறது. இது பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர், தாம்பரம் மற்றும் ஓ.எம்.ஆர் போன்ற முக்கிய பகுதிகளுடன் மிகச்சிறந்த போக்குவரத்து இணைப்பையும் கொண்டுள்ளது. மேலும், ஹெச்.சி.எல், விப்ரோ மற்றும் டெக் மஹிந்திரா போன்ற முன்னணி தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களுக்கு அருகாமையில் இருப்பதாலும், புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் மற்றும் முன்னணி மருத்துவமனைகளை அருகாமையில் கொண்டிருப்பதாலும், இது பணிபுரியும் தொழில்முறை வல்லுநர்கள் மற்றும் குடும்பங்களின் முதன்மையான தேர்வாக மேடவாக்கம் அமைந்துள்ளது.
இப்பகுதி வலுவான சமூகம் சார்ந்த உள்கட்டமைப்பு, தடையற்ற பேருந்து வசதி மற்றும் ரயில் நிலைய வசதி ஆகியவற்றைக் கொண்டுள்ளதால், அன்றாடப் போக்குவரத்தை எளிமையாக மேற்கொள்ளலாம். அதோடு, வரவிருக்கும் மேடவாக்கம் மெட்ரோ இரயில் இணைப்பானது போக்குவரத்து வசதிகளை கூடுதல் சிறப்புடையதாக்கும் என்பதில் ஐயமில்லை. ஆக, மேடவாக்கம் சிறந்த இணைப்பு, மலிவு விலை மற்றும் நீண்ட கால நில மதிப்பீட்டுத் திறன் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.
இந்த அறிமுகம் குறித்து ஜி ஸ்கொயர் குழுமத்தின் நிறுவனரும் மேலாண் இயக்குநருமான திரு. பாலா ராமஜெயம் கூறுகையில், “மேடவாக்கம் இன்று நவீன உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் குடியிருப்புத் தேவைகள் சங்கமிக்கும் இடமாகத் திகழ்கிறது. மெட்ரோ ரயில் இணைப்பு மற்றும் சீரான நகர்ப்புற மேம்பாட்டுப் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதால், இப்பகுதி நிலையான மூலதன மதிப்பைப் பெறத் தயாராக உள்ளது. ஜி ஸ்கொயர் சவுத் கிரவுன் மூலம், போக்குவரத்து இணைப்பு, வசதி மற்றும் நீண்ட கால முதலீட்டுத் திறன் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பாதுகாப்பான, உள்கட்டமைப்பு வசதிகள் தயார் நிலையில் உள்ள வீட்டு மனைத் திட்டத்தை வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் வழங்குகிறோம்,” என்றார்.
ஜி ஸ்கொயர் சவுத் கிரவுன், உலகத்தரம் வாய்ந்த வசதிகள், தார் சாலைகள், தெரு விளக்குகள், 24×7 சிசிடிவி கண்காணிப்பு, ஒரு வருட இலவசப் பராமரிப்பு மற்றும் தெளிவான ஆவணங்களுடன் கூடிய, உடனடியாக வீடு கட்டக்கூடிய பாதுகாப்பான சமூகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டம் மனை வாங்கிய பிறகு வில்லா கட்டுமான உதவியையும் வழங்குகிறது, இது வாங்குபவர்கள் தங்களுக்குப் பிடித்தமான வீட்டை எளிதாகக் கட்டி முடிக்க வழிவகை செய்கிறது.
