×

இந்திய ஏவுகணை அறிவியலில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசு

சென்னை: கவரைப்பேட்டை ஆர்எம்கே பொறியியல் கல்லூரியில், இந்திய ஏவுகணை (ராக்கெட்) அறிவியல் பாராட்டு விழாவில், சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. சென்னை அடுத்த கவரைப்பேட்டையில் அமைந்துள்ள ஆர்எம்கே பொறியியல் கல்லூரியில் கல்விக் குழுமங்களின் நிறுவனத் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் உத்தரவின்பேரில், தமிழ்நாட்டில் உள்ள 38 பள்ளிகளை சேர்ந்த 170 இளம் அறிவியல் மாணவர் புதுமையாளர்களின் சிறப்பான சாதனைகளை கொண்டாடும் வகையில், இந்திய ஏவுகணையின் (ராக்கெட்) அறிவியல் பாராட்டு விழா நேற்று நடந்தது.

விழாவிற்கு ஆர்எம்கே கல்வி நிறுவனங்களின் துணை தலைவர் ஆர்.எம்.கிஷோர் தலைமை தாங்கி, மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தையும், சிறந்த சாதனைக்களுக்கான அர்ப்பணிப்பையும் பாராட்டி பேசினார். ஆர்எம்கே பொறியியல் கல்லூரியின் முதல்வர் கே.ஏ.முகமது ஜுனைத் அனைவரையும் வரவேற்றார். தலைமை விருந்தினராக பத்ம மற்றும் பத்மபூஷண் ஏ.சிவதாணு பிள்ளை கலந்துகொண்டு, சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி, வாழ்த்தி பேசினார். மேலும் இஸ்ரோ மூத்த விஞ்ஞானி எர்.டி.கோகுல், இன்ஸ்டிட்யூஷன் ஆப் கிரீன் இன்ஜினியர்ஸ் நிறுவனர் எல்.ரமேஷ், சக்சஸ் செய்லர் எட் டெக் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சுரேஷ் சீதாராமன் ஆகியோர் மாணவர்களை வாழ்த்தி பேசினர்.

விழாவை முன்னிட்டு இளம் மாணவர்கள் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் புதுமைகளை உருவாக்குவோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டு, நாட்டிற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கி, உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்துவோம் என உறுதியளித்தனர். இந்நிகழ்வு, அறிவியல் மனப்பாங்கை வளர்த்தெடுக்கவும், புதுமைகளை ஊக்குவிக்கவும், எதிர்கால விண்வெளி முன்னோடிகளை உருவாக்கவும் செய்யப்பட்ட வலுவான முயற்சிக்கான சிறந்த சான்றாக திகழ்கிறது. இந்நிகழ்வு முழுவதும் உற்சாகமும் உயர்ந்த இலட்சியங்களும் நிரம்பியதாக அமைந்தது.

Tags : Chennai ,RMK Engineering College ,Kavaripettai ,Chennai, R.S. Munirathnam ,Tamil Nadu… ,
× RELATED ஓசூரில் சந்திர சூடேஸ்வரர் கோயில் தேர்...