கொழும்பு: நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 19.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழந்து 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
