இந்திய மகளிர் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரையும் ஆஸ்திரேலிய மகளிர் அணி கைப்பற்றியது. இன்று நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. வரும் 1ம் தேதி 3வது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது.
