ஸ்ரீவில்லிப்புத்தூர் – மதுரை அரசு பேருந்து கட்டணம் முன்னறிவிப்பு இன்றி உயர்த்தப்பட்டதாக வதந்தி பரவுகிறது: தமிழக அரசு

 

விருதுநகர்: ஸ்ரீவில்லிப்புத்தூர் – மதுரை அரசு பேருந்து கட்டணம் முன்னறிவிப்பு இன்றி உயர்த்தப்பட்டதாக வதந்தி பரவுகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஸ்ரீவில்லிப்புத்தூர் – மதுரை பேருந்துக் கட்டணம் ரூ.100 ஆக உயர்த்தப்பட்டதாக வெளியான தகவலுக்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. குளிர்சாதன பேருந்துக்கே ரூ.100 பயணக் கட்டணமாக வசூல் செய்யப்பட்டது என்று தமிழ்நாடு அரசு உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. சாதாரண பேருந்துகளில் வழக்கமான கட்டணமான ரூ.75 மட்டுமே வசூல் செய்யப்படுகிறது

Related Stories: