*பொதுமக்கள் கோரிக்கை
நெமிலி : நெமிலி அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலை தடுக்க ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நெமிலி பேருந்து நிலையத்தில் இருந்து அண்ணாசாலை வழியாக அரக்கோணம் மற்றும் சேந்தமங்கலம் செல்லும் சாலை உள்ளது.
இந்த சாலை நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சாலையின் இருபுறமும் கடைகள் வைத்து சாலையை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர். குறிப்பாக பஸ் நிலையத்தில் இருந்து அண்ணா சாலை வழியாக புன்னை ஆரம்ப சுகாதாரம் நிலையம் செல்லும் வாகனங்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள், தனியார் மற்றும் அரசு பேருந்துகள், இருசக்கர வாகனங்கள் என தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன சாலையோர ஆக்கிரமிப்பு காரணமாகவும், ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதாலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.எனவே. நெமிலி அண்ணாசாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
