கனடா பிரதமர் மார்ச் 1ல் மோடியுடன் சந்திப்பு

புதுடெல்லி: கனடாவின் பிரதமரான மார்க் கார்னி முதல் முறையாக நான்கு நாள் அரசு முறை பயணமாக இன்று இந்தியா வருகின்றார். இன்று மும்பை வந்திறங்கும் கனடா பிரதமர் இந்தியா மற்றும் கனடா நிறுவனத் தலைவர்கள், நிதி நிபுணர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களுடன் உரையாடுகின்றார்.

பின்னர் ஞாயிறு அன்று டெல்லி செல்லும் அவர் திங்களன்று பிரதமர் மோடியை சந்திக்கின்றார். இரு நாட்டு தலைவர்களும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கை குறித்து விரிவான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Stories: