அம்பையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின் மயானத்திற்கு தனி பாதை அமைக்க வேண்டும்

விகேபுரம்,பிப்.27: அம்பையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின் மயானத்திற்கு தனிப்பாதை அமைக்க வேண்டும் என்று இசக்கி சுப்பையா எம்எல்ஏ, நகராட்சி கமிஷனரிடம் கோரிக்கை மனு அளித்தார். அம்பையில் ரூ.1.46 கோடி மதிப்பில் புதிதாக நவீன மின் மயானம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு செல்லும் பாதை சின்னச் சங்கரன்கோவில் என்று அழைக்கப்படும் கோமதி அம்மாள் சமேத சங்கர நாராயணன சுவாமி கோயிலுக்கு செல்லும் பாதையும் ஒரே வழியாக உள்ளது. எனவே மின் மயானத்திற்கு செல்வதற்கு தனி பாதை அமைக்க வேண்டும் என்று கோயில் நிர்வாகிகள் இசக்கி சுப்பையா எம்எல்ஏயிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதைதொடர்ந்து இசக்கி சுப்பையா எம்எல்ஏ சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டார்.

தொடர்ந்து அவர், அம்பை நகராட்சி ஆணையர் ராஜேஸ்வரனிடம் மின் மயானத்திற்கு செல்வதற்கு தனி பாதை அமைத்து செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அப்போது ஆணையர், விரைவில் தனி பாதை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெறும்’ என்று உறுதி அளித்தார். அப்போது, அதிமுக மாவட்ட துணைச் செயலாளர் மாரிமுத்து, கலை இலக்கிய மாவட்ட அமைப்பாளர் மீனாட்சி சுந்தரம், அம்பை கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜய பாலாஜி, அம்பை நகரச் செயலாளர் அறிவழகன், மேற்கு ஒன்றிய செயலாளர் பிராங்கிளின், கவுன்சிலர் சிவக்குமார் மற்றும் கோயில் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Related Stories: