டெல்லி : நாடு முழுவதும் 14 வயது சிறுமிகளுக்கு இலவச HPV தடுப்பூசி போடும் திட்டத்தை வரும் பிப்.28ம் தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி. அனைத்து மாநில முதலமைச்சர்களும் காணொலி காட்சி மூலம் பங்கேற்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் HPV| தடுப்பூசி போடும் திட்டத்தை நாடு முழுக்க விரிவுபடுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. நாட்டில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை ஒழிக்கும் வகையில், 14 வயது சிறுமிகளுக்கு Gardasil |என்ற ஒருமுறை செலுத்தக்கூடிய HPV தடுப்பூசியை இலவசமாக செலுத்த ஒன்றிய அரசு முடிவு எடுத்துள்ளது.
