மமக ஆண்டு விழா

தொண்டி, பிப்.9: மனிதநேய மக்கள் கட்சியின் 13வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தொண்டியில் கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது. மனிதநேய மக்கள் கட்சியின் 13வது ஆண்டு துவக்க விழா தமுமுக மாநில செயலாளர் சாதிக் பாட்சா தலைமையில் கொடி ஏற்றப்பட்டது. மாவட்ட தலைவர் ஜிப்ரி முன்னிலை வகித்தார். மமக அலுவலகம், செகபோஸ்ட், வட்டாணம் ரோடு உள்ளிட்ட பகுதியில் கொடி ஏற்றப்பட்டது. தொண்டி அன்பாலையா மன வளர்ச்சி குன்றியோர் பள்ளியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. ஒன்றிய செயலாளர் பீர் முகம்மது, கிளை தலைவர் காதர் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஜலால் நன்றி கூறினார்.

Related Stories: