×

60 தமிழ் வருடங்களின் விருட்சங்கள்

பெரும்பாலும் ஆண்டுகளை எண்களாலேயே குறிப்பிடுகின்றோம். ஆனால், தமிழ் ஆண்டுகள் அறுபதும் அறுபது பெயர்களால் அழைக்கப்படுகின்றன. கீழே 60 தமிழ் ஆண்டுகளின் பெயர்களும், அதற்கு இணையான ஆங்கில ஆண்டுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. மற்றும் 60 தமிழ் ஆண்டுகளுக்குரிய அபிமான தேவதைகள் விருட்சங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.சுழற்சி முறையில் 60 தமிழ் வருடங்கள்60 தமிழ் வருடங்களின் பெயர்களும், சுழற்சி முறையில் 60 வருடங்களுக்கு ஒரு முறை வந்து கொண்டே இருக்கும். சுவாமி மலையில் முருகன் சந்நிதானத்திற்கு செல்லும் வழியில், உள்ள 60 படிக்கட்டுகளிலும், இந்த 60 தமிழ் வருடங்களின் பெயர்கள் எழுதப்பட்டிருப்பதை காணலாம்.

வருஷாதி விருட்சங்களின் சிறப்பு

60 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேஷராசியில் சனியும் குருவும் சந்திப்பார்கள். அதனையடுத்து வரும் 60 ஆண்டுகளிலும் ஒவ்வொரு ஆண்டிலும் இவ்விரு கிரகங்களின் சஞ்சார நிலைகளுக்கேற்பவே இந்த வருஷாதி விருட்சங்களை வகுத்தளித்துள்ளார்கள், நமது முன்னோர்கள். குரு மற்றும் சனியின் நிலையை ஒட்டியே ஒருவரின் ஜீவன் குடும்ப பொருளாதார சூழல் அமையும். எனவே, குறிப்பிட்ட ஆண்டில் பிறந்தவர்கள் அவர்களுக்கான பிறந்த ஆண்டின் விருட்சங்களை நட்டு பராமரித்து வந்தால், அவர்களின் வாழ்க்கைச்சூழல் நன்மையடையும்.

பிரபவ
ஆங்கில ஆண்டுகள்:
1927 – 1928, 1987 – 1988.
அபிமான தேவதை – பிரம்மா.
விருட்சம் – கருங்காலி.

விபவ
ஆங்கில ஆண்டுகள்:
1928 – 1929, 1988 – 1989.
அபிமான தேவதை – விஷ்ணு.
விருட்சம் – ஆக்ரூட்.

சுக்கில
ஆங்கில ஆண்டுகள்:
1929 – 1930, 1989 – 1990.
அபிமான தேவதை – மகேசன்.
விருட்சம் – அசோகா.

பிரமோதூத
ஆங்கில ஆண்டுகள்:
1930 – 1931, 1990 – 1991.
அபிமான தேவதை – கணேசன்.
விருட்சம் – அத்தி.

பிரஜோத்பத்தி
ஆங்கில ஆண்டுகள்:
1931 – 1932, 1991 – 1992.
அபிமான தேவதை – கணபன்.
விருட்சம் – பேயத்தி

ஆங்கிரஸ
ஆங்கில ஆண்டுகள்:
1932 – 1933, 1992 – 1993.
அபிமான தேவதை – ஷடானன்.
விருட்சம் – அரசு.

ஸ்ரீ முக
ஆங்கில ஆண்டுகள்:
1933 – 1934, 1993 – 1994.
அபிமான தேவதை – வல்லீ.
விருட்சம் – அரைநெல்லி.

பவ
ஆங்கில ஆண்டுகள்:
1934 – 1935, 1994 – 1995.
அபிமான தேவதை – கௌரி.
விருட்சம் – அலயாத்தி.

யுவ
ஆங்கில ஆண்டுகள்:
1935 – 1936, 1995 – 1996.
அபிமான தேவதை – ப்ராம்ஹி.
விருட்சம் – அழிஞ்சில்.

தாது
ஆங்கில ஆண்டுகள்:
1936 – 1937, 1996 – 1997.
அபிமான தேவதை – மகேஷ்வரி.
விருட்சம் – ஆச்சா.

ஈஸ்வர
ஆங்கில ஆண்டுகள்:
1937 – 1938, 1997 – 1998.
அபிமான தேவதை – கௌமாரி.
விருட்சம் – ஆலம்.

பகுதானிய
ஆங்கில ஆண்டுகள்:
1938 – 1939, 1998 – 1999.
அபிமான தேவதை – வைஷ்ணவி.
விருட்சம் – இலந்தை.

பிரமாதி
ஆங்கில ஆண்டுகள்:
1939 – 1940, 1999 – 2000.
அபிமான தேவதை – வாராஹி.
விருட்சம் – தாளிப்பனை.

விக்ரம
ஆங்கில ஆண்டுகள்:
1940 – 1941, 2000 – 2001.
அபிமான தேவதை – இந்திராணி.
விருட்சம் – இலுப்பை.

விஷு
ஆங்கில ஆண்டுகள்:
1941 – 1942, 2001 – 2002.
அபிமான தேவதை – சாமுண்டி.
விருட்சம் – ருத்திராட்சம்.

சித்ரபானு
ஆங்கில ஆண்டுகள்:
1942 – 1943, 2002 – 2003.
அபிமான தேவதை – அசோகன்.
விருட்சம் – எட்டி.

சுபானு
ஆங்கில ஆண்டுகள்:
1943 – 1944, 2003 – 2004.
அபிமான தேவதை – பிராஜன்.
விருட்சம் – ஒதயம்.

.தாரண
ஆங்கில ஆண்டுகள்:
1944 – 1945, 2004 – 2005.
அபிமான தேவதை – படரன்.
விருட்சம் – கடுக்காய்.

பார்த்திப
ஆங்கில ஆண்டுகள்:
1945 – 1946, 2005 – 2006.
அபிமான தேவதை – பதங்கன்.
விருட்சம் – கருங்காலி.

விய
ஆங்கில ஆண்டுகள்:
1946 – 1947, 2006 – 2007.
அபிமான தேவதை – ஸ்வர்ணரன்.
விருட்சம் – கருவேலம்.

ஸர்வஜித்
ஆங்கில ஆண்டுகள்:
1947 – 1948, 2007 – 2008.
அபிமான தேவதை – ஜ்யோதிஷ்மான்.
விருட்சம் – பரம்பை.

ஸர்வதாரி
ஆங்கில ஆண்டுகள்:
1948 – 1949, 2008 – 2009.
அபிமான தேவதை – விபாஸன்.
விருட்சம் – குல்மோஹார்.

விரோதி
ஆங்கில ஆண்டுகள்:
1949 – 1950, 2009 – 2010.
அபிமான தேவதை – கச்யபலி.
விருட்சம் – கூந்தல் பனை.

விக்ருதி
ஆங்கில ஆண்டுகள்:
1950 – 1951, 2010 – 2011.
அபிமான தேவதை – ரவி.
விருட்சம் – சரக்கொன்றை.

கர
ஆங்கில ஆண்டுகள்:
1951 – 1952, 2011 – 2012.
அபிமான தேவதை – சூரியன்.
விருட்சம் – வாகை.

நந்தன
ஆங்கில ஆண்டுகள்:
1952 – 1953, 2012 – 2013.
அபிமான தேவதை – பானு.
விருட்சம் – செண்பகம்.

விஜய
ஆங்கில ஆண்டுகள்:
1953 – 1954, 2013 – 2014.
அபிமான தேவதை – ககன்.
விருட்சம் – சந்தனம்.

ஜய
ஆங்கில ஆண்டுகள்:
1954 – 1955, 2014 – 2015.
அபிமான தேவதை – பூஷா.
விருட்சம் – சிறுநாகப்பூ.

மன்மத
ஆங்கில ஆண்டுகள்:
1955 – 1956, 2015 – 2016.
அபிமான தேவதை – ஹிரண்யகர்மன்.
விருட்சம் – தூங்குமூஞ்சி.

துன்முகி
ஆங்கில ஆண்டுகள்:
1956 – 1957, 2016 – 2017.
அபிமான தேவதை – மரீசி.
விருட்சம் – நஞ்சுண்டா.

ஹேவிளம்பி
ஆங்கில ஆண்டுகள்:
1957 – 1958, 2017 – 2018.
அபிமான தேவதை – ஆதித்யன்.
விருட்சம் – நந்தியாவர்த்தம்.

விளம்பி
ஆங்கில ஆண்டுகள்:
1958 – 1959, 2018 – 2019.
அபிமான தேவதை – ஸவிதா.
விருட்சம் – நாகலிங்கம்.

விகாரி
ஆங்கில ஆண்டுகள்:
1959 – 1960, 2019 – 2020.
அபிமான தேவதை – அருக்கன்.
விருட்சம் – நாவல்.

Tags :
× RELATED திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரர் திருக்கோயில்