- நியூசிலாந்து
- இலங்கை
- கொழும்பு
- சூப்பர் 8 சுற்று
- T20 உலக கோப்பை
- பிரேமதாச மைதானம்
- பாக்கிஸ்தான்
- இங்கிலாந்து
கொழும்பு: டி.20 உலக கோப்பையில் சூப்பர் 8 சுற்றில் கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் போட்டியில் குரூப் 2 பிரிவில் இலங்கை-நியூசிலாந்து மோதுகின்றன. இலங்கை முதல் போட்டியில் இங்கிலாந்திடம் தோற்றதால் இன்று மற்றும் 28ம்தேதி பாகிஸ்தானை வென்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பு கிடைக்கும். இன்று தோற்றால் நடையை கட்டவேண்டியது தான்.மறுபுறம் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி ரத்தான நிலையில் நியூசிலாந்தும் கட்டாய வெற்றி நெருக்கடியில் உள்ளது.
பேட்டிங், பவுலிங் என வலுவான நிலையில் உள்ளது. இரு அணிகளும் இதற்கு முன் 28 முறை டி.20ல் மோதி உள்ளன. இதில் 11ல் இலங்கை, 16ல் நியூசிலாந்து வென்றுள்ளது. ஒரு போட்டி ரத்தாகி இருக்கிறது. இந்த பிரிவில் இங்கிலாந்து அணி 2 வெற்றிகளுடன் (இலங்கை, நேற்று பாகிஸ்தானுக்கு எதிராக) முதல்அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக 5 வது முறையாக டி.20 உலக கோப்பையில் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.
