- குகேஷ்
- இடைவெளி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பிரேக் செஸ் சாம்பியன்ஷிப்
- செ குடியரசு
- ரஷ்ய கிராண்ட் மாஸ்டர்…
* மோசடி நடக்கிறதா? மவுனம் கலைத்த குகேஷ்
பிரேக்: செக் குடியரசில் நடக்கும் பிரேக் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ள தமிழகத்தை சேர்ந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ் சென்றுள்ளார். செஸ் போட்டிகளில் தில்லுமுல்லு நடப்பதாக, ரஷ்ய கிராண்ட் மாஸ்டர் விளாடிமிர் கிராம்னிக் குற்றம் சாட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். அதுகுறித்து குகேஷ் கூறுகையில், ‘செஸ் உலகில், பிறர் குற்றம் சாட்டுவது போல் பெரியளவில் மோசடிகள் நடப்பதில்லை’ என்றார். கிராம்னிக்கின் குற்றச்சாட்டால் கடும் மன உளைச்சல் அடைந்ததாக சமீபத்தில் காலமான, அமெரிக்க கிராண்ட் மாஸ்டர் டேனியல் நரோடிட்ஸ்கி வீடியோ வெளியிட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
* இன்டர் மிலனை வீழ்த்திய போடோ
புடாபெஸ்ட்: சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் நேற்று பலம் வாய்ந்த இன்டர்மிலன் – போடோ/கிளிம்ட் அணிகள் மோதின. துவக்கம் முதல் சிறப்பாக ஆடிய போடோ அணியின் ஜென்ஸ் பெல்டர் ஹாக், 58வது நிமிடத்திலும், ஹாகோன் எவ்ஜென் 72வது நிமிடத்திலும் 2 கோல்கள் போட்டு அணியை முன்னிலைப்படுத்தினர். மாறாக, இன்டர் மிலன் அணியின் அலெசாண்ட்ரா பாஸ்டோனி, போட்டியின் 76வது நிமிடத்தில் ஒரு கோல் போட்டார். அதன் பின் கோல்கள் விழவில்லை. எனவே, 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற போடோ அணி, முதல் முறையாக, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.
* மகளிர் டி20யில் நியூசி அமர்க்களம்
ஹாமில்டன்: நியூசிலாந்து மகளிர் – ஜிம்பாப்வே மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி, நியூசிலாந்தின் ஹாமில்டன் நகரில் நேற்று நடந்தது. முதலில் ஆடிய நியூசிலாந்து மகளிர், 20 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 202 ரன் குவித்தனர். அந்த அணியின் கேப்டன் அமெலியா கெர் ஆட்டமிழக்காமல் 51 பந்துகளில், 19 பவுண்டரிகளுடன் 101 ரன் விளாசினார். பின் இமாலய இலக்கை நோக்கி ஆடிய ஜிம்பாப்வே மகளிர், 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 110 ரன் மட்டுமே எடுத்தனர். அதனால், 92 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது.
