×

ஜெர்மன் ஓபன் பேட்மின்டன்: ரக்சிதா, தாஸ்னிம் மிர் முதல் சுற்றில் தோல்வி

முலெம் ஆந்தெர்ரூர்: ஜெர்மனியில் நடந்து வரும் ஜெர்மன் ஓபன் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டிகளில் நேற்று, இந்திய வீராங்கனைகள் ரக்சிதா ராம்ராஜ், தாஸ்னிம் மிர் தோல்வியை தழுவினர். ஜெர்மன் ஓபன் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டி ஒன்றில் இந்திய வீராங்கனை ரக்சிதா ராம்ராஜ், டென்மார்க் வீராங்கனை லைன் டிராஸ்ட் கிறிஸ்டோபெர்சென் உடன் மோதினார். முதல் செட்டை, 21-18 என்ற புள்ளிக் கணக்கில் லைன் டிராஸ்ட் கைப்பற்றினார். 2வது செட், 23-21 என்ற புள்ளிக் கணக்கில் ரக்சிதா வசம் வந்தது. இருப்பினும், 3வது செட்டில் சிறப்பாக ஆடிய லைன் டிராஸ்ட், 21-16 என்ற புள்ளிக் கணக்கில் வென்றார். அதனால், 2-1 என்ற செட் கணக்கில் வெற்றி வாகை சூடிய லைன் டிராஸ் 2வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் இந்திய வீராங்கனை தாஸ்னிம் மிர், சீன வீராங்கனை வாங் ஜியி உடன் மோதினார். போட்டியின் துவக்கம் முதல் அட்டகாச ஆட்டத்திறனை வெளிப்படுத்திய சீன வீராங்கனை 21-9, 21-14 என்ற நேர் செட்களில் தாஸ்னிமை வீழ்த்தி 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

Tags : German Open Badminton ,Rakshita ,Tasnim Mir ,Mullem Anderroor ,German Open Badminton Women's Singles Division ,Germany ,Rakshita Ramraj ,German Open Badminton Women's Singles ,
× RELATED உலக கோப்பை டி20 சூப்பர் 8 சுற்றில்...