×

எப்ஐஎச் புரோ ஹாக்கி ஆஸியை வீழ்த்தி அசத்திய இந்தியா: பெனால்டி ஷூட்அவுட்டில் சாகசம்

ஹோபர்ட்: எப்ஐஎச் புரோ லீக் ஹாக்கி போட்டியில் நேற்று, இந்திய அணி பெனால்டி ஷூட்அவுட்டில் ஆஸ்திரேலியாவை அபாரமாக வீழ்த்தியது. எப்ஐஎச் புரோ லீக் ஹாக்கி போட்டிகள் ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் நடந்து வருகின்றன. நேற்று முன்தினம் நடந்த போட்டியில் ஸ்பெயின் அணியிடம் பெனால்டி ஷூட் அவுட்டில் தோல்வியை தழுவிய இந்தியா, நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. போட்டியின் 49வது நிமிடத்தில் ஆஸியின் ஜெரீமி ஹேவர்ட், பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி முதல் கோல் போட்டார். அடுத்த 2வது நிமிடத்தில் இந்தியாவின் ஷீலானந்த் லாக்ரா, அணியின் முதல் கோல் போட்டு, 1-1 என்ற கணக்கில் சம நிலையை ஏற்படுத்தினார். அதன் பின் கோல் விழாததால், பெனால்டி ஷூட்அவுட் முறையில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. அதில் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று ஆஸியை அதிர்ச்சி அடையச் செய்தது.

Tags : India ,Australia ,FIH Pro Hockey ,Hobart ,FIH Pro League ,Hobart, Australia ,
× RELATED உலக கோப்பை டி20 சூப்பர் 8 சுற்றில்...