சென்னை: தமிழ்நாடு காவல்துறையின் சேவைகள் மற்றும் பணிகள் அனைத்தும் ஆன்லைன் மயமானது. குற்றப்பத்திரிகை, எஃப்.ஐ.ஆர். உள்ளிட்டவற்றை நீதிமன்றத்துக்கு ஆன்லைன் மூலம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அறிக்கைகளை உடனே நீதிமன்றத்துக்கு அனுப்பக்கூடிய புதிய மென்பொருளை காவல்துறை நடைமுறைப்படுத்த உள்ளது. காவல் நிலையங்களில் காவலர்களின் பணிகளை நேரடியாக கண்காணிக்கும் வசதியும் இணையதளத்தில் உள்ளது.
