தமிழ்நாடு பிராணிகள் நல வாரியம், கால்நடை பராமரிப்பு துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இவ்வாரியத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தின் கீழ் கைவிடப்பட்டு மீட்கப்பட்ட, ஆதரவற்ற மற்றும் காயமடைந்த விலங்குகளுக்காக மாநிலம் முழுவதும் 6 விலங்குகள் நல காப்பகங்களை நிறுவி வருகிறது.
இக்காப்பகங்களை மனிதாபிமான அடிப்படையில் மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுத்திட ஏதுவாக, தகுதியும் அனுபவமும் வாய்ந்த அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் (NGOs) / விலங்குகள் நல அமைப்புகள் (AWOs) ஆகியவற்றிடமிருந்து, மேற்கண்ட காப்பகங்களின் பராமரிப்பு மற்றும் நிர்வாகத்தினை மேற்கொள்ள ஏதுவாக தகுதியுடைய நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் (Expression of Willingness) வரவேற்கப்படுகிறது.
விரிவான தகவல் மற்றும் விண்ணப்பப் படிவம் வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் : www.tnawb.tn.gov.in
முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தேவையான இணைப்புகள் உடன், மேற்கண்ட முகவரிக்கு 10.03.2026 அன்று அல்லது அதற்கு முன் அனுப்பப்பட வேண்டும்.
