- பஞ்சாயத்து
- திருவள்ளூர்
- பிராந்திய அபிவிருத்தி அதிகாரிகள்
- திருவள்ளூர் ஊரக வளர்ச்சித் துறை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
திருவள்ளூர், பிப்.21: திருவள்ளூர் ஊரக வளர்ச்சித்துறையினரின் காலவரையற்ற போராட்டத்தில் கலந்துக்கொண்ட 28 ஊராட்சி செயலர்களை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம், பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில், கடந்த 10ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், திருவள்ளூர் மாவட்டத்திலும் ஊரக வளர்ச்சி துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டதால், ஊராட்சிகளில் அடிப்படை வசதிகள் கிடைக்காமல், மக்கள் கடும் சிரமப்பட்டனர். இதனால், திருவள்ளூர் மாவட்டத்தில் போராட்டத்தில் கலந்துகொண்ட 28 ஊராட்சி செயலர்களை, மாவட்ட கலெக்டர் பிரதாப் உத்தரவின்பேரில் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் அதிகட்சமாக பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் 13 பேரும், திருவள்ளூர், பூண்டி, எல்லாபுரம் ஆகிய 3 ஒன்றியங்களிலும் தலா 5 பேர் வீதம் மொத்தம் 28 பேரை சஸ்பெண்ட் செய்து, உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், ஊராட்சி செயலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட பகுதிகளில், அருகில் உள்ள ஊராட்சி செயலர்களை கூடுதலாக பணி செய்ய வேண்டுமெனவும், சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியம்: லோகேஸ்வரி – அத்திமாஞ்சேரி, ரமேஷ் – கொல்லலகுப்பம், குணேசேகர் – கரிம்பேடு, நரசிம்மன் – கீச்சலம், மணி – கொளத்தூர், சங்கர் – கோசமுத்திரம், கோவிந்தராஜன் – நெடியம், ஞானப்பிரகாசம் – சூரராஜபட்டடை, வெங்கட்ரமணா – நெடியம், விநாயகம் – திருமால்ராஜூபேட்டை, முரளி – காக்களூர், வெங்கடேசன் – பெருமாநல்லுார், சந்த்ரு – புண்ணியம் ஆகிய 13 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம்: சதீஸ் – நத்தம்பேடு, ஜெய்சங்கர் – புலியூர், ஹரிபாபு – ஒதிக்காடு, கண்ணதாசன் – சிவன்வாயல், விஜயன் – சேலை ஆகிய 5 பேர்.
எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியம்: நதியா – ஏனம்பாக்கம், முத்து – மாம்பள்ளம், லோகநாதன் – பாலவாக்கம், ரமேஷ் – 82 பனப்பாக்கம், சுரேஷ் – செங்கரை ஆகிய 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
பூண்டி ஊராட்சி ஒன்றியம்: யோகநாதன் – மாம்பாக்கம், சுரேஷ் – அனந்தேரி, லோகநாதன் – மெய்யூர் சேகர் – வெள்ளாத்தூக் கோட்டை, ஆல்பர்ட் சகாயம் – அம்மம்பாக்கம் ஆகிய 5 பேரையும் உள்பட 28 பேர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
