×

100 சதவீதம் வாக்களிப்பது குறித்து கலந்தாய்வு கூட்டம்

திருவள்ளூர், பிப்.20: எல்லாபுரம் ஒன்றியம், வாணியன்சத்திரம், டாக்டர் அம்பேத்கர் நகரில், என்ஜிஓஎஸ் பார்ம் இன் தமிழ்நாடு சார்பில், தமிழ்நாட்டில் நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. மாநிலத் தலைவர் குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு நல வாரியம் கோருதல், தமிழக முதல்வரை சந்தித்து மனு சமர்பித்தல், மாநில தேர்தல் அலுவலரை நேரில் சந்தித்து 2026 சட்டமன்ற தேர்தலில் 100 சதவிகிதம் வாக்களிக்க வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வலியுறுத்துவது, விழிப்புணர்வு நிதி வேண்டி மனு சமர்பித்தல், மத்திய அரசு நிதி மற்றும் மாநில அரசு நிதி, தனியார் நிதி, சிஎஸ்ஆர் நிதி, எதிர்கால செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

Tags : Thiruvallur ,2026 assembly elections ,Tamil Nadu ,NGOS Farm ,Yellapuram Union ,Vaniyanchathram ,Dr. ,Ambedkar ,Nagar ,
× RELATED திருவள்ளூர் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள்