காபுல்: பயங்கரவாத முகாம்களை தாக்குவதாக கூறி ஆப்கானிஸ்தான் மீது அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு சரியான நேரத்தில் உரிய பதிலடி கொடுக்கப்படும் என தாலிபான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. எங்கள் நாட்டின் இறையாண்மையை மீறும் இத்தகைய செயல்களைப் பொறுத்துக்கொள்ள முடியாது எனவும் தாலிபான் அரசு கூறியுள்ளது. பாகிஸ்தானின் வான்வழி தாக்குதல்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
