×

லெபனான் மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்: 12 பேர் பலி

பெய்ரூட்: இஸ்ரேல் மீண்டும் லெபானான் மீது கடந்த சில தினங்களாக தாக்குதலை நடத்தி வருகிறது. அதன்ஒரு பகுதியாக, லெபனானின் கிழக்கு பெகா பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் மையங்களை குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் நேற்று தாக்குதல் நடத்தியது. இதில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

குழந்தைகள் உள்பட காயமடைந்த 24 பேரும் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் நேற்று முன்தினம்(பிப்.20) லெபனானின் துறைமுக நகரமான சிடோனில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர்.

 

Tags : Israel ,Lebanon ,Beirut ,Hezbollah ,eastern Bekaa Valley of Lebanon ,
× RELATED ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய...