×

போதைப்பொருள் கடத்திய கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் 3 பேர் பலி

வாஷிங்டன்: பசிபிக் பெருங்கடல் வழியே போதைப்பொருள் கடத்தி சென்ற கப்பல் மீது அமெரிக்க ராணுவம் தாக்கியதில் 3 பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் பசிபிக் பெருங்கடல் வழியே சென்று கொண்டிருந்த கப்பல் ஒன்றில் போதைப் பொருள்கள் கடத்தப்படுவதாக அமெரிக்க ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி அமெரிக்க ராணுவம் கப்பல் மீது நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். இவ்வாறு கடந்த செப்டம்பர் மாதம் முதல் கிழக்கு பசிபிக் பெருங்கடல் மற்றும் கரிபீயன் கடல் பகுதிகள் வழியே போதைப்பொருள் கடத்தியதாக 43 கப்பல்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Tags : United States ,Washington ,US military ,Pacific Ocean ,US ,President Trump ,
× RELATED ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய...