சட்டீஸ்கர் வனப்பகுதியில் கட்டியிருந்த 105 நினைவுத் தூண்கள் நக்சல் சிலைகள் தகர்ப்பு: தீவிரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை

ராய்ப்பூர்: சட்டீஸ்கர் காடுகளில் அமைக்கப்பட்டிருந்த நக்சலைட்டுகளின் நினைவு சின்னங்களை அதிரடிப் படையினர் இடித்துத் தள்ளினர்.சட்டீஸ்கர் மாநிலம் பஸ்தார் மண்டலத்தில் நக்சலைட்டுகள் தங்கள் இயக்கத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக பல்வேறு இடங்களில் நினைவுத் தூண்களை அமைத்து வந்தனர். இந்த சின்னங்கள் அந்த பகுதிகளில் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் விதமாகவும், இளைஞர்களைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் வகையிலும் இருந்து வந்தன.

காடுகளுக்குள் மறைமுகமாகச் செயல்படும் நக்சலைட்டுகளின் செல்வாக்கைக் குறைக்க மாநில அரசு கடந்த காலங்களில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வந்தது. இதன் ஒரு பகுதியாக நக்சலைட்டுகளின் அடையாளங்களை அழிக்கும் பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து நேற்று பிஜப்பூர் மாவட்டத்தில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து ‘அதிரடி அழிப்பு நடவடிக்கை’ என்ற பெயரில் சோதனையை நடத்தினர். இந்த நடவடிக்கையின் மூலம் நக்சலைட்டுகளால் கட்டப்பட்டிருந்த 105 நினைவுத் தூண்கள் மற்றும் சிலைகள் கனரக இயந்திரங்கள் மூலம் முழுமையாக இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன.

இச்சம்பவம் குறித்து பஸ்தார் மண்டல உயரதிகாரி கூறுகையில், ‘நக்சலைட்டுகளின் ஆதிக்கத்தை முறியடிக்கவும் அவர்களின் கொள்கைகளுக்கு எதிராக மக்களைத் திரட்டவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது’ எனத் தெரிவித்தார். தற்போது இந்த நடவடிக்கையை அடுத்து நக்சல் பாதிப்புள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Stories: