டெல்லி: தென் மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது என்று இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு, வடமேற்கு திசையில் நகரக்கூடும். 7- 11 செ.மீ வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் தமிழ்நாட்டிற்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
