×

பதவி ஆசைக்காக எதையும் செய்ய துணிந்தவர் ஓபிஎஸ்: டிடிவி தினகரன் திடீர் பாய்ச்சல்

தஞ்சை மாவட்டம் சுவாமிமலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கடந்த 30 ஆண்டுகளாக ஓ.பன்னீர்செல்வம் தொடர்பில் உள்ளவர். அவருக்கு ஆயிரம் வருத்தங்கள் இருக்கலாம். அவர் எந்த இயக்கத்திற்கு செல்வதற்கும் தனிப்பட்ட முறையில் அவருக்கும், உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பனுக்கும் விருப்பத்தை பொறுத்தது.

ஜெயலலிதா இருந்தவரையில் பரதனாக நடித்துவிட்டு அவரது மறைவிற்கு பிறகு முதல்வராக்கிய அந்த கட்சிக்கும், ஆட்சிக்கும் 2017ல் திமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் பிப்ரவரி 18ல் எதிர்த்து வாக்களித்தவர் தான் ஓ.பன்னீர்செல்வம். மீண்டும் பிரதமர் மோடி பெருந்தன்மையாக ஏற்றுக்கொண்டு எடப்பாடியோடு பேசி அவரை துணை முதல்வராக்கினார்.

ஆனால் இன்று தனக்கு பதவி வேண்டும் என்பதற்காக எதையும் செய்ய துணிந்து விட்டார் என்பது உண்மையிலேயே வருந்தத்தக்கது. கடந்த 2017 பிப்ரவரி 5ல் அவரை பதவியில் இருந்து இறக்கியது ஒரு நியாயமான நடவடிக்கை என்பதை இன்று தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்வார்கள். ஏனென்றால் அவர் திமுகவிற்கு செல்லட்டும், பதவி ஏற்கட்டும் இதெல்லாம் மக்கள் தீர்மானிப்பது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : OPS ,TTV ,Dinakaran ,AMMK ,General Secretary ,Swamimalai, Thanjavur district ,O. Panneerselvam ,Usilampatti MLA… ,
× RELATED மேட்டூர் அணை நீர்மட்டம் 89 அடியானது