×

பெரம்பலூர் பிரியம் மருத்துவமனையில் பெரு நகரகரங்களுக்கு இணையாக எலும்பு புற்றுநோய் கட்டி அறுவை சிகிச்சை

பெரம்பலூர், பிப். 19: பெரம்பலூரில் பெருநகரங்களுக்கு இணையாக எலும்பு மூட்டு அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு வரும் பிரியம் மருத்துவ மனையில், சுமார் 33 வயது மதிக்கத்தக்க நபர் கடுமையான வலது முழங்கால் மூட்டு வலியுடன் சிகிச்சைக்கு வந்தார். அவரை பரிசோதனை செய்ததில் வலதுபுற தொடை எலும்பில் புற்று நோய் [Giant Cell Tumor] இருப்பது கண்டறியப்பட்டது.

பிரியம் மருத்துவமனையில் எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர்களான டாக்டர் விவேக் தலைமையில் எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர்களான டாக்டர்கள் விக்னேஷ், பிரீத்தி, ராஜேஷ் ஆகியோர் அடங்கிய மருத்துவக்குழு, அந்த புற்று நோய் கட்டியை அறுவை சிகிச்சை மூலமாக அகற்றினர். இதனைத் தொடர்ந்து நோயாளி மிகுந்த நலமுடன் உள்ளார்

மேலும் சென்னை, திருச்சி, கோவை, மதுரை, சேலம் போன்ற பெருநகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் மட்டுமே செய்யப்பட்டு வந்த எலும்பு புற்றுநோய் கட்டி அறுவை சிகிச்சையை முதன் முதலாக பெரம்பலூரில் பிரியம் மருத்துவ மனையில் அறுவை சிகிச்சை மூலமாக வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து சிகிச்சை பெற்ற நோயாளின் உறவினர்கள் டாக்டர் விவேக் தலைமையிலான மருத்துவ குழுவினருக்கு மனதார நன்றி தெரிவித்துள்ளனர்.

 

Tags : Perambalur Priyam Hospital ,Perambalur ,Priyam Hospital ,
× RELATED தமிழ்க்கூடல் விழா தாய் மொழியை பிறமொழி கலப்பில்லாமல் பேசவேண்டும்