×

ரம்ஜான் நோன்பு தொழுகை நாளை துவக்கம்: 56 பள்ளிவாசல்களுக்கு நோன்பு கஞ்சிக்கு அரிசி வழங்கல்

பெரம்பலூர்,பிப்.18: ரம்ஜான் நோன்பு தொழுகை நாளை (19ஆம்தேதி) தொடங்குகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் 56 பள்ளி வாசல்களுக்கு நோன்பு கஞ்சிக்குத் தேவையான அரிசி அரசு சார்பாக வழங்கப்பட்டுள்ளது. உலகெங்கும் வாழும் இஸ்லாமியர்களின் சிறப்பு பண்டிகையான ரம்ஜான் பண்டிகையையொட்டி, 30 நாட்கள் நடைபெறும் நோன்பு நாளை (19ஆம் தேதி) தொடங்கி மார்ச் 20ஆம் தேதிவரை நடைபெறுகிறது.

21ஆம்தேதி புனித ரம்ஜான் பண்டிகை பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 56 பள்ளிவாசல்கள் மற்றும் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சிறப்புத் தொழுகை நடத்தப்படும், இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள, சமஸ்கான் எனும் ஜாகீர்தாரால் 1723 ஆம் ஆண்டு கட்டப்பட்டு 303 ஆண்டுகள் பழமை வாய்ந்த, வாலிகண்டபுரம் சமஸ்கான் பள்ளிவாசல் உள்பட 57 பள்ளி வாசல்களில் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.

இதனையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் நகரிலுள்ள மவுலானா பள்ளிவாசல், மதரஸா பள்ளிவாசல், டவுன் பள்ளி வாசல், மக்கா, மதீனா, நூர், ஆலம்பாடி சாலை, துறை மங்கலம் பள்ளிவாசல்கள் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய வி.களத்தூர் ஜாமிஆ பள்ளி வாசல், தமிழக அளவில் புகழ்பெற்ற லெப்பைக் குடிகாடு மேற்குமஹல்லம், கிழக்கு மஹல்லம், அரும்பாவூர், விசுவக்குடி, பூலாம்பாடி, சத்திரமனை, முகமது பட்டிணம், பெரிய வடகரை, அம்மாப் பாளையம், குரும்பலூர், பாடாலூர், பெரியம்மா பாளையம் பகுதிகளில் உள்ள 56 பள்ளி வாசல்களில் ரம்ஜான் நோன்பினை முன்னிட்டு தினமும் மாலையில் தொழுகைகள் நடத்தப்படவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் மாவட்ட அரசு காஜி தலைமையில், அனைத்து பள்ளிவாசல் நாட்டாமை, முத்தவல்லிகள் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்துள்ளனர். இந்தத் தொழுகைகளின் போது வழங்கப்படும் நோன்புக் கஞ்சிக்காக, பெரம்பலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக 56 பள்ளி வாசல்களுக்கும் தேவையான அரிசி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags : Ramzan fast ,Rice ,Perambalur ,Perambalur district ,Ramzan ,Muslims ,
× RELATED தமிழ்க்கூடல் விழா தாய் மொழியை பிறமொழி கலப்பில்லாமல் பேசவேண்டும்