×

இந்தியாவுடன் 2வது டி20: ஆஸி மகளிர் அமர்க்களம்

கேன்பெரா: ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, ஆஸி மகளிர் அணியுடன் நேற்று 2வது டி20 போட்டியில் மோதியது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா மகளிர் அணியின் துவக்க வீராங்கனைகள் ஜார்ஜியா வால், பெத் மூனி இணை, அட்டகாசமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இந்த இணை, முதல் விக்கெட்டுக்கு 128 ரன்கள் குவித்த நிலையில், பெத் மூனி 46 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜார்ஜியா வால் 57 பந்துகளில் ஒரு சிக்சர் 11 பவுண்டரிகளுடன் 88 ரன்கள் விளாசினார். 20 ஓவரில் ஆஸி, 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன் எடுத்தது.

பின், 164 ரன் இலக்குடன் இந்திய மகளிர் களமிறங்கினர். துவக்க வீராங்கனைகள் ஷபாலி வர்மா 29, ஸ்மிருதி மந்தனா 31 ரன்னில் அவுட்டாகினர். பின் வந்தோர் ஆஸி பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். 20 ஓவரில் இந்திய மகளிர் 9 விக்கெட் இழப்புக்கு 144 ரன் மட்டுமே எடுத்தனர். அதனால், 19 ரன் வித்தியாசத்தில் ஆஸி வெற்றி பெற்றது. ஜார்ஜியா வால் ஆட்ட நாயகி. 2 போட்டிகள் முடிவில், இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளன. கடைசி போட்டி நாளை நடைபெற உள்ளது.

Tags : 2nd T20 ,India ,Canberra ,women's cricket team ,Australia ,women's ,T20 ,women's team ,Georgia Wall ,Beth Mooney ,
× RELATED டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: கனடா...