கும்பகோணத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்

கும்பகோணம், பிப்.5: கும்பகோணம் நேடிவ் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் 131 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.முன்னாள் எம்எல்ஏ ராமநாதன் தலைமை வகித்து 75 மாணவர்களுக்கும், 36 மாணவிகளுக்கும் ரூ.5 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார். முன்னாள் நகராட்சி தலைவர் ராஜா நடராஜன், முன்னாள் கவுன்சிலர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் ரவிக்கண்ணன் வரவேற்றார். உதவி தலைமையாசிரியர் ஆனந்தகுமார் நன்றி கூறினார். ஜெ.ஆர்.சி ஒருங்கிணைப்பாளர் ஜான்ஸ்டீபன் நிகழ்ச்சியை தொகுத்து பேசினார்.

Related Stories: