- பிறகு நான்
- உச்ச நீதிமன்றம்
- எடப்பாடி
- சேலம்
- அஇஅதிமுக
- பொதுச்செயலர்
- எடப்பாடி பழனிசாமி
- மிலானி
- பிறகு நான்…
சேலம்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த சட்டமன்ற தேர்தலின்போது தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் சொத்துக்கள், வருமானம் ஆகியவைகளை மறைத்து பொய்யான தகவலை தெரிவித்துள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தேனியை சேர்ந்த இன்ஜினியர் மிலானி என்பவர் சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு கூறிய நிலையில் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து எடப்பாடி பழனிசாமி தடை உத்தரவையும் பெற்றார்.
பின்னர் இந்த தடை உத்தரவு நீக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் விசாரணையை தொடங்கிய நிலையில், எப்ஐஆரை ரத்து செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் சேலம் மத்திய குற்றப்பிரிவுக்கும், மனுதாரர் மிலானிக்கும் பதில் மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது. இந்த வழக்கு கடந்த நவம்பர் மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வாங்கினர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மனுதாரரான மிலானி உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து காவல்துறையும் பதில் மனு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
