×

எனக்குலாம் அப்போவே கூட்டம் வந்துச்சு… விஜய் பற்றி நோ கமென்ட்ஸ்: வைகோ ‘டாடா’

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருபுவனத்தில் மதிமுக மத்திய மண்டல நிதி அளிப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பொது செயலாளர் வைகோ பேசியதாவது: இந்த தேர்தல் அக்னி பரீட்சை. நமக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும். யார், யார் போட்டியிடுவார்கள் என்ற விவரம் தற்போது தெரியாது. நாம் வெற்றி பெற்றே ஆக வேண்டும். தொண்டர்களிடம் நிதி வாங்கும் நிலையில் தான் மதிமுக உள்ளது.

சிலருக்கு பெரிய அளவில் கூட்டம் வருவதாக கூறுகின்றனர். அவ்வாறு வந்த அந்த கூட்டத்தை விட, நான் கட்சி ஆரம்பித்த போது எனக்கு வந்த கூட்டம் அதிகம். அதற்கு புகைப்படங்களே சாட்சி. தமிழகத்தில் நடைபெறக்கூடிய தேர்தலில் திமுக தனித்து பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறும். திமுக தனித்தே ஆட்சி அமைக்கும். மீண்டும் ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியை அமைப்பார். புதிதாக அரசியலுக்கு வந்தவர்கள் (விஜய்) பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Vijay ,Vigo 'Tata ,PRESTIGIOUS CENTRAL ZONE ,THIRUVIDAYAMARATHUR ,THANJAVUR DISTRICT ,Secretary General ,Wiko ,
× RELATED போலீஸ் தடையில்லா சான்று பெறாத...