×

திமுக கூட்டணி உடையவே உடையாது: அடித்து சொல்லும் திருமாவளவன்

திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திமுக கூட்டணியில் தான் காங்கிரஸ் இருக்கும். அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. எந்த குழப்பமும் இல்லை என அழுத்தமாக தெரிவித்து கொள்கிறேன். திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது. கூட்டணி உருவாக்குவதிலும், பாதுகாப்பதிலும் அக்கறையோடு இருக்கிறோம்.

இங்கு கேள்விக்கு இடம் இல்லை. காங்கிரஸ் அதிக தொகுதிகள் கேட்பது பேச்சுவார்த்தையில் முடிவாகும். அதிக தொகுதிகள் கேட்பதால் கூட்டணி உடையாது. இந்த கூட்டணி உருவாக்குவதில் எங்கள் பங்கும் இருக்கிறது. திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : DMK alliance ,Thirumavalavan ,VKC ,Trichy airport ,Congress ,
× RELATED போலீஸ் தடையில்லா சான்று பெறாத...