×

பொருளாதார தாக்குதல் நடத்தும் ஒன்றிய அரசு: எழிலன் எம்எல்ஏ குற்றச்சாட்டு

சென்னை: சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட இடைகால நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் போது, ஆயிரம்விளக்கு தொகுதி எம்எல்ஏ எழிலன் (திமுக) பேசியதாவது: ஜிஎஸ்டி நிலுவை தொகை, நிதி பகிர்வு, ஜல்ஜீவன் நிதி, சர்வசிக்ஷான் நிதி என தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை ஒன்றிய அரசு கொடுக்கவில்லை. சுகாதார துறைக்கு 4 சதவீதம் செஸ் வரி கட்டுகிறார்கள்.

மதுரை எய்ம்ஸ் இன்னும் கட்டுகிறார்கள். செஸ் வரி ஒரு ஊழல். 50 சதவீதம் மாநிலங்களுக்கு நிதி அளிக்க வேண்டும் என்று சொன்னார்கள் அதையும் கொடுக்கவில்லை. ஒன்றிய அரசு பிரித்தாலும் சூழ்ச்சியை செய்கிறது. நம்மீது ஒன்றிய அரசு பொருளாதார தாக்குதல் நடத்துகிறது.ஆயிரம் விளக்கு தொகுதியில் பல திட்டங்களை முதல்வர் கொண்டு வந்துள்ளார். அண்ணா மேம்பாலம், வள்ளுவர் கோட்டம் புதுப்பிப்பு உள்ளிட்ட 550 பணிகளை செய்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Union government ,MLA ,Ezhilan ,Chennai ,Legislative Assembly ,Aiyarvilakku constituency ,MLA Ezhilan ,DMK ,
× RELATED போலீஸ் தடையில்லா சான்று பெறாத...